'இந்த ஆண்டின் சிறந்த மனிதர் போப் பிரான்ஸிஸ்'-டைம்
பத்திரிகை
போப் பிரான்ஸிஸ்
தனது இந்த ஆண்டின் சிறந்த மனிதராக, டைம் பத்திரிகை போப் பிரான்ஸிஸ் அவர்களைத் தேர்தெடுத்துள்ளது.
கடந்த ஒன்பது மாதங்களாக ரோமன் கத்தோலிக்கத்
திருச்சபையின் தலைவராக இருக்கும் போப் பிரான்ஸிஸ், மனசாட்சியின்
புதிய குரலாக உருவெடுத்துள்ளார் என்று அந்தப் பத்திரிகை கூறுகிறது.
தற்போது உலகத்தின் கவனம் புதிய போப்பாண்டவராகத்
தேர்ந்தெடுக்கப்-பட்டிருக்கும் ஃபிரான்ஸிஸ்மீது குவிந்துள்ளது. முதல் முறையாக
அர்ஜெண்டினா வில் இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இவரது பின்னணி என்ன? இவர் எப்படிப்பட்டவர்? இன்றைய சூழலில் இவர்
எதிர்கொள்ளவேண்டிய சவால்கள் என்னென்ன?
அறிமுகம்
போப் என்பவர் ரோம் நகரின் பிஷப். உலகம் முழு -வதி-லும் வாழும்
சுமார் 100 கோடி கத்தோலிக்கப் பிரிவு கிருத்தவர்களின் மத
குருவாகவும் இவர் மதிக்கப்-படு-கிறார். ரோம் நகருக்குள் அமைந்திருக்கும்
வாட்டி-கன் என்னும் சிறிய சுதந்தர நாட்டின் அதிபரும் இவரே.
கத்தோலிக்கத் தேவாலயத்தில் ‘போப்’ என்பவர் புனித பீட்டரின் வழித்தோன்றலாகப் போற்றப்படுபவர். போப்பாண்டவரின்
அதிகாரப்பூர்வ அலுவலகத்துக்குப் பப்பாஸி என்று பெயர். கடந்த 2000 வருடங்களில் கத்தோ-லிக்க மதத்தை உலகெங்கும் பரப்பிய பெருமை இதற்கு உண்டு.
ஆட்சியிலும் அரசியலிலும் போப்-பாண்டவர்கள் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்த காலம்
ஒன்றிருந்தது. ஆனால் தற்போது மதப் பிரசாரம், கல்வி, சுகாதாரம், மனித உரிமை ஆகியவற்றில் மட்டுமே
வாட்டிகன் கவனம் செலுத்தி வருகிறது.
போப் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
தொடக்கத்தில் பாதிரியார்களாலும், குரல்
வாக்கெடுப்பு மூலமும் புதிய போப்பாண்டவரைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் தற்போது
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த
கார்டினல்கள் சிஸ்டைன் தேவாலயத்தில் நடை-பெறும் கான்க்ளேவ் எனப்படும் கூட்டம்
வாயிலாகப் பூட்டப்பட்ட அறைக்குள் ரகசிய வாக்கெடுப்பு நடத்திப் போப்-பாண்டவரைத்
தேர்ந்தெடுக்கின்றனர். தேர்தல் முடியும்வரை வெளி உலகத்துடனான இவர்களது தொடர்பு
முற்றிலும் துண்டிக்கப்படும். கூடியிருக்கும் கார்டினல்கள் தங்களுக்குள் ஒருவரை
போப்பாண்ட-வராகப் பரிந்துரைத்து வாக்களிப்பர். மூன்றில் இரு பங்கு வாக்குகளைப்
பெறும் கார்டினலே அதிகாரப்பூர்வ போப்பாண்டவராக அறிவிக்கப்படுவார். அதுவரை
வாக்கெடுப்பு மீண்டும் மீண்டும் நடைபெறும்.
12-13 நாட்கள் தொடர்ந்தும் மூன்றில் இரு பங்கு
ஆதரவுடன் புதிய போப்பாண்டவரைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை எனில் அதிக வாக்குகள்
பெறுபவர் போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். வாக்குச் சீட்டு எண்ணப்பட்டு
முடிவு தெரிந்தவுடன் அவை தீயிட்டு எரிக்கப்படும். சிஸ்டைன் தேவாலய புகை-போக்கி
வழியே தேர்வாகாத வாக்குச் சீட்டுகளுடன்
ரசாயனம் கலந்த கரும்புகை வெளியேறினால் புதிய போப்-பாண்டவர் இன்னும்
தேர்வாகவில்லை என்றும், தேர்ந்தெடுத்த வாக்குச் சீட்டுகளுடன்
ரசாயனம் கலந்த வெண்புகை வெளியேறினால் புதிய போப்பாண்டவர்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றும் பொருளாகும். 2005 தொடங்கி
தேவாலயத்திலுள்ள மணிகளும் ஒலித்து புதிய போப்பாண்டவர் தேர்வை உறுதிப்படுத்தி
வரு-கின்றன.
கார்டினல்களின் குழுத் தலைவரான டீன், போப்பாகத்
தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டினலை இரு கேள்விகள் கேட்-பார். ‘போப்பாண்டவராகத்
தேர்வானதை ஏற்றுக் கொள்-கிறீர்களா?’ என்பது முதல் கேள்வி.
அவர் சம்மதிக்கும் விதமாக ‘அக்செப்டோ’ என்று
கூறினால் ‘என்ன பெயரில் உங்களை அழைக்க விரும்புகிறீர்கள்?,
என இரண்டாவது கேள்வியைக் கேட்பார். ஒருவேளை டீனே போப்பாண்டவராகத்
தேர்வானால் மேற் கண்ட கேள்விகளைத் துணை டீன் கேட்-பார். இந்தச்
சம்பிரதாயங்-களுக்குப் பிறகு மூத்த கார்டினல் புனித பீட்டர் சதுக்க தேவாலய
மாடத்திலிருந்து புதிய போப் தேர்வான விவரத்தையும் அவரது புதிய பெயரையும் உலகுக்கு
அறிவிப்பார். தேர்வானவர் போப்பாண்ட-வருக்-கான அதிகாரப்பூர்வ அங்கிகளுடன் (immantatio)
குழுமியிருப்பவர்கள் முன் தோன்றி ஆசி வழங்குவார்.
புதிய போப்
2013 மார்ச் 13 அன்று 266வது போப்-பாண்ட-வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போப் பிரான்ஸிஸ் லத்தீன்
அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர். இயற்-பெயர் ஜார்ஜ் மேரியோ பெர்கோலியோ.
1936 டிசம்பர் 17 அன்று பியூனஸ்
ஏர்ஸில் பிறந்தார். தந்தை மேரியோ ஜோஸ் பெர்-கோலியோ ஒரு ரயில்வே ஊழியர். தாய்,
ரெஜினா மேரியா சிவோரி. இவர்களுக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள்.
இவருக்கு ஸ்பானிஷ், இத்தாலியன் மற்றும்
ஜெர்மன் தெரியும். வாட்டிகன் வரலாற்றில் 1272 வருடங்களில்
ஐரோப்பியர் அல்லாதவர் பதவியேற்பது இதுவே முதல் முறை. சொசைட்டி ஆஃப் ஜீசஸ்
அமைப்பிலிருந்து ஒருவர் போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதும் இதுவே முதல்
முறை.
பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளைத் தொடர்ந்து பியூனஸ் ஏர்ஸ்
பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். மதப்படிப்புகள்
முடிந்ததும் 1969 டிசம்பர் 13 அன்று
பாதிரியாராக நியமிக்கப்பட்டார். சொசைட்டி ஆஃப் ஜீஸஸில் படிப்படியாக உயர்ந்து 1973-79
வரை அதன் புரொவன்-ஷியல் சூப்பர்வைசராகப் பணியாற்றினார். 1980
முதல் 1986 வரை சான் மிகல் செமினரியின்
ரெக்டராகப் பதவி வகித்தார். தொடர்ந்து ஜெஸ்யூட் சமூகத்தின் ‘கன்ஃ-பெஸர்
மற்றும் ஆன்மிக இயக்குனரானார்’. பல கட்ட வளர்ச்சி-களுக்குப்
பிறகு 1998ல் பியூனஸ் ஏர்ஸின் ஆர்ச்பிஷப் ஆனார். 2001
பிப்ரவரி 21 அன்று அப்போதைய போப் இரண்டாம்
ஜான் பால் இவருக்கு ‘சான் ரொபர்-டோ பெலார்மினோவின் கார்டினல்
பாதிரியார்’ என்னும் பட்டத்தைக் கொடுத்து கௌரவித்தார்.
அரசியல், சமூகப் பார்வை
2004 இல் அர்ஜெண்டினா அதிபர் நெஸ்டர் கிர்ச்னர்
மற்றும் அவருக்குப் பிறகு பதவியேற்ற அவரது மனைவி கிரிஸ்டினா ஃபெர்னாண்டஸ் கிர்ச்னர்
ஆகியோருடன் ஃபிரான்சிஸுக்கு சுமுகமான நல்லுறவு இருக்கவில்லை. ஆட்சியைக் கைப்பற்றத்
துடிக்கும் ஓர் அரசியல்வாதி-யாகவே இவரை அவர்கள் கருதினர். 2008ல் விவசாயிகள் பிரச்னைக்கு இவர் குரல் கொடுத்தபோது அரசுக்கு எதிராக
மக்களைத் தூண்டி விடுபவராகவே இவரைப் பார்த்தனர். ஏழைகள் மற்றும்
ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகவும் வசதியானவர்களுக்கு ஆதரவாகவும் அரசு
செயல்படுகிறது என்று ஃபிரான்சிஸ் குற்றம் சாட்டினார். நாட்டில் நிலவும் ஏழைமையைச்
சுட்டிக்காட்டினார். பியூஸ் ஏரஸ் லஞ்சத்தின் தலைநகராக மாறிவிட்டது என்று குற்றம்
சாட்டினார்.
‘பியூனஸ் ஏர்ஸில் குழந்தைகள்மீதான வன்முறை, குறிப்பாக பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில்
ஈடுபடுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். பெண் குழந்தைகள் பொம்மைகளுடன்
விளையாடு-வதை மறந்து, முரட்டு ஆண்களின் பாலியல் சபலத்துக்கு
உள்ளாகித் தாங்களே உயிருள்ள பொம்மைகளாகச்சின்னாப்பின்னமாகிச் சீரழிகின்றனர். இயேசு
ரத்தம் சிந்தியதற்கும், உயிர் துறந்ததற்கும் இங்கு
அர்த்த-மில்லாமல் போய்விட்டது. மனிதர்களை விட இங்கு நாய்களுக்குத்-தான் அதிக
மரியாதை!’ என்று 2007ல் கார்டினலாக
இருந்த போது லத்தீன் அமெரிக்க ஆர்ச் பிஷப்களின் சார்பாக கூட்டறிக்கை வெளியிட்டு
அப்போதைய போப் பெனிடிக்டிடம் சமர்ப்பித்தார்.
2010ல் அர்ஜெண்டினா அரசு ஒரே பாலினத்
திருமணங்-களுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்தபோது இயற்கைக்கு விரோதமான செயல்
என்று வாதிட்டார். அதே போல் குழந்தை என்பது இறைவனின் பரிசு என்ப-தால் கருக்கலைப்பு
மற்றும் கருத்தடைச் சாதனங்-களுக்கும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இறக்கும்
தறுவாயிலுள்ள 12 எய்ட்ஸ் நோயாளிகளின் கால்களைக் கழுவி
முத்தமிட்டது மறக்கமுடியாதது. திருமணம் செய்துகொள்ளாத பெண்களின் குழந்தை-களுக்கு
ஞானஸ்தானம் செய்ய மறுத்த பாதிரியார்களை அழைத்துக் கண்டித்ததுடன் அவற்றை ‘ஆண்டவனின் குழந்தைகள்’ என்று அரவணைத்ததும் அவரது
பெருமைக்குச் சான்றாகத் திகழ்கின்றன.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஃபாக்லாண்ட் தீவுகள் மீதான உரிமையை
நிலைநாட்ட இங்கிலாந்துக்கும் அர்ஜெண்டினாவுக்கும் போர் நடைபெற்று அதில்
இங்கிலாந்து ஜெயித்தது தெரிந்த விஷயம். ஆனால் 2012ல் ‘ஃபாக்லாண்ட் தீவுகள் அர்ஜெண்டினாவுக்கே
சொந்தம்’ என்று ஃபிரான்சிஸ் சொன்னதாக
செய்திகள் வெளியாயின. இது குறித்து பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் காமரூன் சமீபத்தில்
விடுத்த ஓர் அறிக்கையில் ‘போப் ஃபிரான்ஸிஸ் அப்போது கூறிய
கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. ஃபாக்லாண்ட் தீவுகள் என்றென்றும் எங்களுக்கே
சொந்தம். ஃபாக்லாண்ட் மக்களும் இங்கிலாந்-துடன் சேரவே விருப்பம் என்று கருத்துக்
கணிப்பு மூலம் உறுதிப்படுத்தி உள்ளனர்’ என்று
குறிப்பிட்டுள்ளார்
சிறப்புகள்
அன்பு, மனிதநேயம், சமூக
நீதி ஆகியவற்றை உயிர் மூச்-சாகக் கொண்டு ஏழைகளுக்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்தார்
என்று ஃபிரான்சிஸ் வருணிக்கப்படு-கிறார். இவருடைய எளிமையை பலரும் குறிப்பிட்டுச்
சொல்கிறார்கள். இவரது எளிமை போப்பாண்டவராகத் தேர்வான
பின்னரும் தொடர்கிறது. போப்பாண்டவராகத் தேர்-வானதும் வழக்கமாக எல்லா போப்களும்
சிம்மாசனத்-தில் அமர்ந்து கொண்டுதான் ஏனைய கார்டினல்களின் வாழ்த்து-களைப் பெறுவது
வழக்கமாம். ஆனால் இந்த நடைமுறையை உடைத்தெறிந்து நின்றுகொண்டே ‘நானும் உங்களில் ஒருவன்’ என்று
அடக்கமாக வாழ்த்து-களைப் பெற்றுக் கொண்டாராம் புதிய போப். தேவாலய மாடத்தில் நின்றுகொண்டு
கூடியிருந்த கத்தோலிக்க மக்களுக்கு ஆசி வழங்கும்போது போப் அணியும் அதிகாரப்பூர்வ
அங்கிகள் மற்றும் தங்கத்திலான சிலு-வையை அணியாமல் பியூனஸ் ஏர்ஸ் கார்டினலாக
இருந்தபோது அணிந்த உடையிலேயே தோன்றியது பலரை ஆச்சரியப்பட வைத்தது. புனித
ஃபிரான்ஸிஸ் என்பவர் ஏழைகளின் மீது அன்பு கொண்டவர் என்பதால் அவரது பெயரையே தான்
வைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தார். ஃபிரான்ஸிஸ் என்ற பெயரை ஒரு போப் வைத்துக்
கொள்வதும் இதுவே முதன் முறை.
குற்றச்சாட்டு
1976ல் நடைபெற்ற அர்ஜெண்டினாவின் மோசமான போர்
எனப்படும் ‘டர்டி வார்’ காலத்தில் 30,000க்கும் அதிகமானோர் காணாமல் போனார்கள். ஆர்லாண்டோ யோரியோ மற்றும் ஃப்ரான்ஸ்
ஜாலிக் ஆகிய இரு பாதிரியார்களைக் கடற்படை கடத்தியதைத் தொடர்ந்து சந்தேகப் பார்வை
இவர்மீது படர்ந்தது. இவ்விருவரும் பின்னர் உயிருடன் திரும்பினாலும்
சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு, போதை மருந்துகளுக்கு
அடிமை-களாக நிர்வாண கோலத்தில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
சொசைட்டி ஆஃப் ஜீசஸ் அமைப்பின் மேற்பார்வை-யாளராக தனது அதிகாரத்தைத்
தவறாகப் பயன்படுத்தி இரு பாதிரியார்களின் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தாரென 2005ல் மனித உரிமை வழக்கறிஞர் இவர்மீது கிரிமினல் வழக்குத்
தொடர்ந்தார். ஆனால் ஆதாரமில்லை என்பதால் தீர்ப்பு தள்ளுபடியானது. தான் நிரபராதி
என்றும், கடற்படை கடத்திச் சென்ற பாதிரியார்களை விடுவிக்கப்
போராடியதே தான்தான் என்றும் பெர்கோலியோ விளக்கமளித்துள்ளார். தற்போது இவர் போப்
ஃபிரான்சிஸ்ஸாகத் தேர்வான-தைத் தொடர்ந்து வாடிக்கனும் இவர் மீது சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான முகாந்திரமுமில்லை என்று அறிக்கை வெளியிட்டது.
சவால்கள்
கிறிஸ்தவத்தின் ஒரு பிரிவான 100 கோடி
கத்தோலிக்கர்-களின் மதகுருவாகத் தேர்வாகியுள்ளவர் போப்பாண்-டவர் ஃபிரான்ஸிஸ்.
பழமைவாதியான இவர் இன்றைய நவநாகரிக சமூகத்தை எதிர்கொள்ள வேண்டி-யிருக்கும்.
வாடிக்கனின் நிதி விவகாரங்களில் ஒளிவுமறைவுகளும் பல்வேறு ஊழல்களும்
நடப்பதாகச் சொல்லப்படு-கிறது.
அர்ஜெண்டினா, பிரேசில், சிலி,
உருகுவே, மெக்ஸிகோ போன்ற உலகின் மிகப் பெரிய
கத்தோலிக்க நாடுகளில் மத நம்பிக்கை குறைந்து வருவதாகப் புள்ளி விவரங்கள்
தெரிவிக்கின்றன. புராடெஸ்டண்ட் மற்றும் பெந்தெ-கோஸ்ட் பிரிவுகளில் பலர்
இணைவதாகவும், இன்னும் பலர் கத்தோலிக்க மதத்திலிருந்து
விடுவித்துக் கொண்டு எந்த மதத்திலும் இல்லை (நன்ஸ்) என்று பதிவு செய்து
கொள்வதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஆசிய மற்றும் ஆப்பிரிக்கக்
கண்டங்களில் கத்தோலிக்கம் பரவினாலும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் குறையும்
எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும்.
கருக்கலைப்பு, கருத்தடைச் சாதனம் ஆகியவற்றைக்
கத்தோலிக்கம் எதிர்ப்பதைப் பெண்களே விரும்பாததால் மத நம்பிக்கை குறைகிறது என்கிறார்கள்.
கத்தோலிக்கப் பாதிரியார்கள் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்பதுடன் உடலுறவும்
கூடாது என்னும் கண்டிப்பான உத்தரவு காரணமாகவே பலர் பாதிரியார்களாக வர
விரும்ப-வில்லை என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான போப்பாண்டவர்கள் இத்தாலியர்-கள். முதன் முறையாக 1522ல் நெதர்லாந்தின் ஆறாம் போப் ஆட்ரியன் தேர்வானார்.
நீண்ட காலம் கழித்து 1978ல் போலந்தின் இரண்டாம் போப் ஜான்
பால், 2005 ல் ஜெர்மனியைச் சேர்ந்த பதினாறாம் போப்
பெனெடிக்ட், தற்போது 2013ல்
அர்ஜெண்டி-னா-வின் போப் பிரான்சிஸ் என இத்தாலியர் அல்லாதோரும் தேர்வாகி-யுள்ளனர்.
நீண்ட காலம் போப்பாண்டவர் பதவி வகித்தவர் ஒன்ப-தாம் பயஸ் (1846-1878 அதாவது 11,560 நாள்கள்).
மிகக் குறைந்த காலம் பதவி வகித்தவர் எட்டாம் அர்பன் (1590 செப்டம்பர்
15 முதல் 27 வரை 13 நாள்கள்).
78 வயதில் போப் ஆரோக்கியமாக இருப்பதற்கு அவரது
வாழ்வியல் முறைகளும் ஒரு முக்கியக் காரணம். இருப்-பினும் ஒருமுறை கடுமையான நோயால்
பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய தருணம் அவரது வலது நுரை-யீரலின் மேற்பகுதி
அகற்றப்பட்டது. இதனால் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் மூச்சு மண்டலத்தைத்
தொற்று-நோய் பாதிக்கும் பட்சத்தில் இடர்களைத் தவிர்க்க முடியாது என்கிறார்கள்
மருத்துவர்கள்.
No comments:
Post a Comment