සවර්ග රාජ්‍යයේ දොරටුව දේවසභාව

Heavenly Entrance Church Of God

பரலோக வாசல் தேவ சபை



இந்த பத்திரிகையை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் உங்கள் கருத்துக்களை அறிவிக்க மறக்க வேண்டாம் காரணம் நாம் திறம்பட செயப்பட வழி காட்டும்

இது பரலோக வாசல் தேவ சபை பத்திரிகையாகும் இப் பத்திரிகைக்காக ஜெபியுங்கள்

ස්වාදීන සඟරාව

Powered By Blogger

සවර්ග දොරටුවේ දේවසභාව

Unabhängige Zeitschrift Independent NewspaperHuman Rights - Menschenrecht - மனித உரிமை-Social Services සමාජ සේවා-


සවර්ග රාජ්‍යයේ දොරටුව දේවසභාව


Heavenly Entrance Church Of God


பரலோக வாசல் தேவ சபை

இஸ்தாபகர் & தலைமைப் போதகர்

டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி

செயலாளர் பொண் .சுரேன்

கணக்காளர் கிறசன் பயஸ்

தொடவாளர் சேத் ரவி


காணிக்கை தசமபாகம்

- Unabhängige Zeitschrift Independent Newspaper 2000 - 2014


எவரையும் ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் விடயம் அல்ல மாறாக உண்மையை உண்மையாய் எழுதுகின்றோம் எம்மிடம் ஒளிவு மறைவு எதுவும் இல்லை
David Jayanadan Appukutti




காணிக்கை தசமபாகம்

(சிறந்தவை)

பிரியமானவர்களே, நம்முடைய ஜீவியத்தில் எவ்வாறு சிறந்தவைகளை கொடுக்கிறோம்? நாம் தேவனை ஆராதிக்கும் போது, காணிக்கை தசமபாகம் கர்த்தருக்கென்று உற்சாகமாக கொடுக்கும் போது, ஏழை எளியவர்களுக்கு சந்தோஷமாக உதவும்போது, மாம்ச இச்சைகளுக்கு இடம் கொடுக்காது பரிசுத்தமாக ஜீவியத்தை பாதுகாத்துகொள்வதின் மூலம், அவருடைய ஊழியத்தை உண்மையாக செய்யும் போது, நம்மிடமுள்ள சிறந்ததை அவருக்கு கொடுக்கிறோம்.


நிர்வாகம்

பரலோக வாசல் தேவசபை


http://hecg-weltrekord.blogspot.ch/





காணிக்கை


நாம் உற்சாகமாக தேவனுக்கு காணிக்கை (Offering) செலுத்தவேண்டும். பைபிளில் ஒரு ஏழை விதவை 2 காசு போட்டதை இயேசு பெரிதாகச் சொன்னார் என்றால், அது எந்த அளவு தேவனின் இதயத்தை தொட்ட செயலாக இருக்கவேண்டும்! (இங்கே 2 காசு என்பது அவள் ஏழை என்று காட்டுகிறது; ஆனால் அவள் தான் வாழ்வதற்கு இருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்பதுதான் தேவனின் இதயத்தை தொட்ட செயல்). "அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்" என்று II கொரி 9:7ல் வாசிக்கிறோம். இது கட்டளையல்ல.

லூக்கா 6:38ல் கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார்.


தசமபாகம்

லூக்கா

11 அதிகாரம்

42. பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசம பாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டுவிடாதிருக்கவேண்டுமே.


மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள். தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே. (மல் 3:8)


Luke 6:38

Give, and it shall be given unto you; good measure, pressed down, and shaken together, and running over, shall men give into your bosom. For with the same measure that ye mete withal it shall be measured to you again.


Luke 11:42

But woe unto you, Pharisees! for ye tithe mint and rue and all manner of herbs, and pass over judgment and the love of God: these ought ye to have done, and not to leave the other undone.


Malachi 3.8

Will a man rob God? Yet ye have robbed me. But ye say, Wherein have we robbed thee? In tithes and offerings.


---------------------------------------------------------------

http://hecg-weltrekord.blogspot.ch/




Freiwillige Spenden sind erwünscht. Dies ist eine freiwillige christliche Gemeinschaft. Das Bankkonto ist in Sri Lanka vorhanden und nicht in der Schweiz. Auch die Finanzbuchhaltung wird dort geführt.

Wer möchte kann gerne Spenden - sind sehr erwünscht!


Auf das Konto HECG:


விரும்பியவர்கள் மட்டும்தான் கட்டாயமாக அல்ல


இந்த வங்கி இலக்கம் எவருடைய தனிப்பட்டதும் அல்ல பரலோக வாசல் தேவ சபைக்குரியதே


அருமையானவர்களே !

நன்கொடை இன்று தொடக்கம் 26.12.2013 இருந்து தர விரும்புபவர்கள் எமது சபை வங்கி இலக்கத்துக்கு அனுப்பலாம்


எமக்கு சுவிஸ் அல்லது இலங்கையில் ஏன் எந்த வெளி நாட்டு பணமும் எமக்கு கிடைப்பதில்லை மாறாக எமது அங்கத்தவர்கள் இலங்கை ஏழை (விசுவாசிகள்) கொடுக்கும் ஒரு சில பணமே இலங்கை ஊழியர்கள் சிறு தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாக உள்ளது


ஆனாலும் நாம் வெளிநாடுகளில் உள்ள எமது அனைத்து மக்களையும்

வேண்டிகொள்வது யாதனில் முடியுமானால் முடிந்தவரை எமக்கு உதவுங்கள்


எமது இலக்கு :- வறிய ஏழை குழந்தைகள் / அனாதைகள் / திக்கற்றோர்

அடக்கு முறைக்குள் உள்ளக்கப்பட்டோர் மற்றும் எமது ஊழியத் தேவைகள்


நீங்கள் விரும்பினால் உதவி புரியுங்கள்

http://hecg-weltrekord.blogspot.ch/



Heavenly Entrance Church of God


( HECG )




பெயர் / Name

பரலோக வாசல் தேவசபை

Heavenly Entrance Church of God


Bank Account / Bankkonto

வங்கி இலக்கம் :- 8224000940


Bank Name

வங்கியின் பெயர் :-Commercial Bank

Horana Branch

Swift Code : cceylklxxxx

SriLanka


நன்கொடைக்கான காரணம்

உதாரணம் :- சமூகசேவை / சபை ஊழியங்ககள் / சுவிசேசகம்

(எதாவது ஒன்றை தெரிவு செய்யலாம் )


Spendebereiche: christliche Sozialhile / christliche Gemeinde / Gospel (alles nur für Sri Lanka)


எவ்வளவு கொடுக்கலாம்

10 ரூபாய்க்கு மேல்


Was darf man spenden? Was Sie spenden ist Ihnen überlassen.


வெளிநாடுகளில் வாழ்வோர் விரும்பினால்

நீங்கள் வாழும் நாட்டு பண நாணயத்தை அனுப்பலாம்


Bitte vergessen Sie nicht Ihren Namen und die Adresse anzugeben für den Dankesbrief den Sie nach erfolgreicher Spende erhalten werden.


மறக்காமல் உங்கள் விலாசத்தை பணம் அனுப்பும்போது தெரிவித்தால் உங்களுக்கு எமது நன்றி கடிதம் அனுப்புவோம்


Diese Spenden sind nicht für private Nutzungen gedacht, sie sind wirklich für die freiwillige, gemeinnützige Arbeit. Herzlichen Dank auch im Voraus für Ihre Spende.



Gottes Segen.

நிர்வாகம் / Administration



பரலோக வாசல் தேவசபை

கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக

நன்றி / Heavenly Entrance Christliche Gemeinschaft Sri Lanka




ආධාර


ප්‍රේමවන්ත සහෝදර ,සහෝදරයිණි ,
අපගේ දේවස්ථාන ගිණුමට යම් කෙනෙක් ආධාර කිරීමට කැමති නම් ,

එම මුදල් ගිණුමට බැර කරන්නේ කුමන හේතුවක් නිසාද යන්න සඳහන් කරන්න.උදාහරණයක් හැටියට නම් දේවස්ථානයේ වැඩි දියුණුවට ,

සුභාරංචිය දේශනා කිරීමට,නැත්නම් දුගී දරුවන්ගේ සුභසෙත පිණිස ,

වැඩිහිටි උපස්ථාන කිරීම වැනි දෑ සඳහන් කරන්න . එමෙන්ම ඔබගේ ලිපිනයන් ද සඳහන් කරන්න ස්තුති ලිපි ලිවිමට.


Heavenly Entrance Church of God

( HECG )SRILANKA

Name ;

Heavenly Entrance Church of God


Bank Account / Bankkonto

8224000940


Bank Name

Commercial Bank Horana Branch

Swift Code : cceylklxxxx


SriLanka



மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள இவர்களுடன் தொடர்வு கொள்ளவும்


சபைத்தலைவர் டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி

பரலோக வாசல் தேவ சபை SRIlANKA


பரலோக வாசல் தேவ சபை

கணக்காளர் சகோதரர் SRILANKA


G. பயஸ் டெலிபோன் 0094 77 47 96 418

SRILANKA

பரலோக வாசல் தேவ சபை

செயலாளர் : சகோதரர் P. சுரேன்

SRILANKA



http://hecg-weltrekord.blogspot.ch/

மனிதனை மனிதன் வெட்டுவதும் கொல்லுவதும் நாகரீகம் அற்ற செயல் ,
மதம் என்ற போர்வையில் அப்பாவி மக்கள் சித்திரவதை , கொலை , உடமைகள் கொள்ளை, மற்றும் நாசகாரியங்களை ஆண்டவன் பெயரில் செய்யப்படுவதை வன்மையாக கண்டிக்கின்றோம்

மனிதவ மற்றும் மனிதாபிமான அடிப்படையில் சரியானதோ அல்லது ஏற்றுக்கொள்ளக் கூடியதோ ஒன்றோ அல்ல
சகலரும் சமமானவர்கள்

மதம் , இனம் ,ஜாதி ,சமயம் , குலம் இவைகள் மனிதனால் உண்டாக்கப்பட்டது அனால் மனிதனோ இறைவனால் உண்டாக்கப்பட்டான்

அவனைக் கொல்ல மனிதனுக்கு உரிமை இல்லை ,

எல்லா மனிதருக்கும்
இரத்தம் சிவப்பு தானே !
இந்த
சிவப்பு இரத்தத்தை
மண்ணில் சிந்துவதும் ஏன் ?
ஏற்கனவே
சிவப்பாகி விட்டதே
ஜேசுக்கிறிஸ்துவின் இரத்தம்
இந்த பூமீயில்
2000 வருடங்களுக்கு முன்
நனைந்து விட்டதே
இனி நீங்கள் நனைக்க தேவை இல்லை

Rev.Appukutti Jayanadan David

සවර්ග රාජ්‍යයේ දොරටුව දේවසභාව
பரலோக வாசல் தேவ சபை

Translate / übersetzung / எந்தமொழி வேண்டும் என்பதை இங்கே தெரிவு செயுங்கள்

2014 වසර වෙනුවෙන් ස්වාමින්වූ ජේසුස් කිස්තුස් වහනේගෙන් පැමිණියාවූ අනාගත වාක්‍ය .


නුඹලාගේ සෞභාග්‍ය පිණිස මිස විපත්තිය පිණිස නොවන,නුඹලාගේ අනාගත බලාපොරොත්තු මුදුන් පමුණුවා දෙන මගේ යෝජනා මම හොඳින් දනිමි. මෙසේ පවසන්නේ ස්වාමින්වන මම ය .

ජෙරමියා 29:11




For I am conscious of my thoughts about you, says the Lord, thoughts of peace and not of evil, to give you hope at the end.

Jeremiah 29:11

2014 இவ் வருட வாக்குதத்த வசனம்

எரேமியா 29:11
நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்றுகர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.



பரலோக வாசல் தேவ சபை දමිල ක්‍රිස්තියානි වචන කියලා මෙහි ලිය තියෙනවා.මෙහි ලිය ඇති වචන ඉතාමත් යහපත් වචන.දමිල භාෂාවෙන් ලියතියෙන නිසා ඒගැන සැකයක් නොසිතන්න.මෙමෙ වචන කියවීමෙන් සිත පිරිසිඳු වෙනවා.මෙමෙ වචනම සිංහල භාෂාවෙන් ලිවීමට අපි උත්සහදරනවා.සිංහල ක්‍රිස්තියානි ලින්ක් එකක් තියෙනවා එයද බලන්න.බලා අන්අය සමගද බෙදාහදාගන්න.

Sunday, 25 August 2013

தசமபாகம்




தசமபாகம் என்றால் ஷராம்என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஷராம்என்றாலே சத்துருவை தாக்கும் ஆயுதம்.
(மல்கியா 3: 8-10 )
·        உங்கள் கனியை (ஆசீர்வாதத்தை) பட்சித்து போடுகிறவைகளை (சாத்தான்) கண்டிப்பார்
·        உங்கள் நிலத்தின் பலனை அழிப்பதில்லை (உங்களுக்கு வரப் போகும் ஆசீர்வாதத்தை) அல்லது நீங்கள் விதைத்த விதையின் ஆசீர்வாதத்தை பிசாசு அழிப்பதில்லை.
·        வெளியிலுள்ள திராட்சச்செடி பழமில்லாமற் போவதில்லை.
I. தசமபாகத்தை வஞ்சிப்பதென்றால் என்ன?
பொதுவாக வஞ்சிப்பதென்றால் எனக்கு சொந்தமில்லாத பொருளை இல்லாவிட்டால் இன்னொருவருடைய பொருளை கொடுக்காமல் நானே வைத்திருப்பது வஞ்சிப்பதென்றும்  /  திருட்டு என்றும் கூறலாம்.
லேவி 27:30,31,34
தசமபாகம் கர்த்தருடையது 1000/-  சம்பாதிப்பதில் 900/- மட்டுமே என்னுடையது. 100/- எனக்கு சொந்தமல்ல. சொந்தமல்லாத 100/- கொடுக்காததே வஞ்சிப்பது அல்லது திருட்டு என்று கூறப்படுகிறது. அப்படியானால் இந்த மாதம் கொடுக்கா விட்டால் நான் 100/- திருடியிருக்கிறேன்

II. தசமபாகம் கொடுப்பது பிதாவை கனம் பண்ணுவது
நீதி.3:9 (முதற்பலன் ) தசமபாகம் கொடுக்கும் போது பிதாவை கனம் பண்ணுகிறோம்.

III. கஷ்டப்படுகிற போது தசமபாகம் கொடுக்க வேண்டுமா? கொடுக்க முடியுமா?
உபாகமம் 26 ஆம் அதிகாரம் தசமபாகத்தை குறித்து பேசப்படுகிறது.
உபாகமம் 26:14
1. துக்கம் கொண்டாடும் போது அதில் (தசமபாக பணத்தில்) புசிக்கவும் இல்லை.
2. தீட்டான காரியத்துக்கு அதில் (தசமபாகத்தில்) எடுக்க வில்லை
3. இழவு காhpயத்துக்காக அதில் (தசமபாகத்தில்) ஒன்றையும் படைக்கவில்லை
என்ன கஷ்டம் வந்தாலும், சாப்பிட இல்லா விட்டாலும், இழவு காரியங்கள், மரண நேரத்தில் பணம் இல்லாவிட்டால் கூட அதை எடுத்து செலவு பண்ணக் கூடாது.

IV. கனியை சாப்பிடுங்கள்  விதையை சாப்படாதீர்கள்
கனியென்பது             ஆசீர்வாதம்
விதை என்பது           கர்த்தருக்கு கொடுக்கும் பங்கு
விதையை சாப்பிட்டால் (கர்த்தருக்கு கொடுக்கும் தசமபாகத்தையும் எடுத்து செலவு பண்ணினால்) எப்படி மரம் வளரும், கனியுண்டாகும்?
கொடுப்பது என்பது விதைப்பது என்பதை மறக்க வேண்டாம். 2 கொரி 9:6-11

V. ஆபிரகாம் தசமபாகம் கொடுத்து ஆசீர்வதிக்கப்பட்டான்
தசமபாகம் என்பது நியாயப்பிரமாண காலமாகிய மோசேயின் காலத்தில் உண்டானதல்ல. தசமபாகம் மனச்சாட்சி காலமாகிய ஆபிரகாமின் காலத்தில் உண்டானதொன்று.
ஆதியாகமம் 14:20 ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.
ஆபிரகாம் இழந்த எல்லாவற்றையும் திரும்ப பெற்று வரும் போது அவைகளில் ஆபிரகாம் தசமபாகம் கொடுத்தான்.

ஆபிரகாமின் ஆசிர்வாதம்
ஆதி.14:19
1.   வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவரின் ஆசீர்வாதம்    உண்டாவதாக.
2.   உன் சத்துருக்கள் உன் கையில் ஒப்புக் கொடுக்கப்படும்.
ஆதி.15:1
தசமபாகம் கொடுத்தப்பின் தேவன் தரிசனமாகி ஆசீர்வதிக்கிறார். இந்தக் காரியங்கள் நடந்த பின்புஇந்த வார்த்தையை கவனியுங்கள்.
ஆதி.15:1
1.   கர்த்தரே சில ஆசீர்வாதங்களை கூறுகிறார்.

VI. பணத்தை குறித்து நாம் அறிய வேண்டியது
இன்று பணத்தை குறித்து பலர் தவறாக எண்ணம் வைத்திருக்கிறார்கள்.
·        பணம் என்னுடையது
·        நான் கஷ்டப்பட்டேன்
·        எனது கடினமான பிரயாசம்
பணம் யாருடையது! எங்கிருக்கிறது, எங்கிருந்து வருகிறது, யார் தரக்கூடும் என்பதை முதலாவது அறிய வேண்டும்.
A. கர்த்தரே அனைத்துக்கும் அதிபதி!
பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது (சங்24:1)
I.            தங்கமும் வெள்ளியும் கர்த்தருக்குச் சொந்தமானது ஆகாய் 2:8.
II.            அனைத்துவகை நிலமும் கர்த்தருக்கு உரியது. லேவி.25:23
III.            எல்லா மிருகங்களும் கர்த்தரின் உடைமை. சங்.50:10,12
B. கர்த்தரே சகலத்தையும் கட்டுப்படுத்துகிறார்
தானியேல் 4:34,35
சங்.135:6
C. நமக்கு தேவையானவற்றை கர்த்தரால் மட்டுமே தரமுடியும்.
கர்த்தரே தருகிறார். அனைத்தும் அவருடையது என்றால் அவாரிடம் மட்டுமே நாம் பெற முடியும்.
1 நாளா.29:12 – ஐசுவரியமும், கனமும் தேவனாலே வருகிறது.
1 நாளா 29:16 உமது கரத்தில் வாங்கினோம், உமக்கே கொடுக்கிறோம்
D. ஐசுவரியம் / பணம் சம்பாதிக்க பெலன் தருவதே தேவன்
·        உபாகமம் 8:17     என் சாமர்த்தியம், என் கைபெலனினால் சம்பாதித்தேன்    என்று இருதயத்தில் சொல்லாதே
·        உபாகமம் 8:17     -ஐசுவரியத்தை சம்பாதிக்க தேவனே பெலன் கொடுக்கிறார்.
கவனியுங்கள் உபாகமம் 8:18 “இந்நாளில் உனக்கு உண்டான ஐசுவரியம்இப்பொழுது இருக்கும் வசதி, பணம், பொருள் எப்படி உண்டானது. இதற்கு தேவனே பெலன் தந்தார்.
by Pas. Victor Rajamani


என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள்;  அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். -  (மல்கியா 3:10).




1. நமது இருதயத்தை கர்த்தருடைய சித்தத்தை செய்யும்படி ஆசீர்வதிக்கிறது.
.
2. நமது வாழ்க்கையை தேவகிருபையினால் நாம் எண்ண முடியாத உயரத்திற்கு கொண்டு வருகிறது.
.
3.  நமது கைகளை கர்த்தருடைய ஊழியத்தை செய்வதற்கு தயாராக்குகிறது.
.
4. நமது சிந்தனையில் கர்த்தருக்கென்று சரியான காரியத்தைச் செய்தோம் என்கிற திருப்தியை தருகிறது.
.
5. கர்த்தரை கனப்படுத்தியதால் மீதமிருக்கிற ஒன்பது பகுதிகளும் நமக்கு ஆசீர்வாதமாக்கப்படுகிறது.
.
6. தனிப்பட்ட ஊழியருக்கு தங்களுடைய ஊழியத்தை தடையின்று நடத்தப்பட ஆசீர்வாதமாகிறது.
.
7. சபையானது இன்னும் அதிக அளவில் கர்த்தருடைய ஊழியத்தை நிறைவேற்ற உதவுகிறது. 
.
இப்படி ஆசீர்வாதங்களைப் பெற காரணமாயிருக்கிற தசமபாகத்தை கர்த்தருக்கு தொடர்ந்து செலுத்துவோம். கர்த்தர் இதன் மூலம் கனப்படுகிறார். நம்மை ஆசீர்வதிப்பார்.
.
சமீபத்தில் ஒரு அருமையான சகோதரர் மின்னஞ்சல் வழியாக கேள்வி ஒன்றைக் கேட்டிருந்தார், அந்தக் கேள்விக்கான பதில் மற்றவர்களுக்கும் பயன்படும் என்பதால் அதை ஒரு கட்டுரையாகப் பதிக்கிறேன். கேள்வி:...தசமபாகம் கொடுக்கக் கூடாது, அது பழைய உடன்படிக்கைக் காலத்தில் செய்யப்பட்ட பழைய முறைகளில் ஒன்று அதை தற்கால ஊழியர்கள் தங்கள் சம்பாத்தியத்துக்கு தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது, புதிய உடன்படிக்கைக் காலத்தில் தசமபாகம் என்பது தவறானதே என்று நானும் கருதுகிறேன், என்னுடைய கேள்வி தசமபாகம் கேட்பது சரியா? தவறா? அன்பு சகோதரர் மணிராஜ் அவர்கக்ளுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அன்புடன் வாழ்த்துகிறேன், ஒரு அருமையான கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள், இது போன்ற சந்தேகங்கள் மற்றவர்களுக்கும் இருக்கும் என்பதால் இதை ஒரு கட்டுரையாகப் பதிக்கிறேன். பொதுவாக நாம் வேதாகமத்தின் முதல் பகுதியை பழைய ஏற்பாடு என்று குறிப்பிடுகிறோம், ஆனால் அந்த பழைய ஏற்பாடு என்பது தேவன் மனிதர்களோடு செய்துகொண்ட முதல் உடன்படிக்கை ஆகும், ஆகவே அதை முதல் உடன்படிக்கை என்று சொல்லுவதே சிறப்பானதாக இருக்கும். சரி தற்போது கேள்விக்கு வருவோம், சகோதரரே நாம் தற்போது கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்ட தேவபிள்ளைகளும் வஞ்சிக்கப்படத் தக்கதான கடைசி காலங்களில் வாழ்ந்துவருகிறோம், ஆகவே இப்படிப்பட்ட நூதனமான உபதேசங்கள் வருவது தவிர்க்க முடியாததே, நானும் வேதத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கு முன்பதாக தங்களைப் போலவே ஒரு தவறான போதனைகளால் தசமபாகம் தவறானது என்றே கருதி வந்தேன், ஆனால் வேத வெளிச்சத்தில் ஆராயும்போது இப்படிப்பட்ட எண்ணம் தவறானது என்பதைப் புரிந்துகொண்டேன். தசம பாகம் என்றால் என்ன? தசமம் என்பது பத்து என்பதாகும், தசமபாகம் என்பது பத்தில் ஒரு பங்கு என்பதாகும், இந்த நடைமுறை முதன்முதலாக ஆபிரகாம் சாலேமின் இராஜாவாகிய மெல்கிசேதேக்கு அவர்களுக்கு தன் எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தான் என்று வேதம் சொல்லுகிறது. தசமபாகம் என்பது தேவன் நமக்கு அருளியிருக்கும் ஆசீர்வாதங்களுக்காக நன்றி செலுத்துவதன் அடையாளம் ஆகும், நம்முடைய பிதாவாகிய தேவன் நம்மீது கொண்டிருக்கும் அன்பினால் தன்னுடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் அவரை நமக்கு பலியாக ஒப்புக்கொடுத்து தம்முடைய அன்பை நமக்கு நிரூபித்திருக்கிறார். அப்படிப்பட்ட இரக்கமும் அன்பும் நிறைந்த தேவனுக்கு நம்முடைய ஆசீர்வாதங்களில் பத்தில் ஒருபங்கைக் கூட தரவேண்டாம் என்ற போதனைகள் நிச்சயமாக சாத்தானுடையவைகளாகத் தன் இருக்க முடியும். தசமபாகத்தின் சிறப்பு பூமியும் அதன் நிறைவும் கர்த்தருடையது(சங் 24:1, 50:12, I கொரி10:26,28,) என்றிருக்கும் போது தேவனுக்கு நம்முடைய எல்லாவற்றிலும் தேவனுக்கென்று தசமபாகம் கொடுப்பது என்பது எந்தவகையில் சரியானது என்ற கேள்வியையும் கேட்டிருந்தீர்கள், தசமபாகம் என்பது கர்த்தருக்கு உரியது என்பதோடல்லாமல் அது கர்த்தருக்கு பரிசுத்தமானது என்றும் வேதம் நமக்கு போதிக்கிறது(லேவி 27:30). அதே போல பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதிருங்கள்(மத் 7:6) என்றும் வேதம் போதிக்கிறது, கர்த்தருக்கு பரிசுத்தமான தசமபாகத்தை, உலகக் காரியங்களான நாய்களுக்குக் கொடுப்பது எந்தவகையில் நியாயம் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும், தசமபாகம் என்பது முதன்மையான பாகம் தேவனுடைய அன்பிற்கு ஈடாக நீசர்களாகிய நம்மால் எதைக் கொடுத்துவிடமுடியும்? ஆனாலும் தேவனுக்கு பரிசுத்தமானதை நாம் அவருக்குக் கொடுத்துவிட கட்டளை பெற்றிருந்தும், அதை நாம் வஞ்சிப்போமானால் எத்தனை பெரியபாவிகளாய் இருப்போம்? சிலர் தங்கள் முக்கியத்துவம் வாய்ந்த தேவைகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள தொகையில் தசமபாகத்தை எடுத்து வைப்பார்கள். அது தவறானகாரியம் ஆகும், எல்லாவற்றிலும் முதன்மையான பாகத்தை தேவனுக்கென்று கொடுப்பது தேவன் மீது நாம் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துவதாக இருக்கும் அல்லவா? ஆகவே பத்தில் ஒருபாகம் தானே அது எந்த பாகமாக இருந்தால் என்ன? கொடுத்தால் போதும் என்ற போலியான வாதங்களை விட்டுவிட்டு, முதற்பலனாகிய முதலாம் பாகத்தை தேவனுடைய பரிசுத்தமாக இருக்கும் பாகத்தை வஞ்சியாமல் தேவனுக்குக் கொடுக்க வேண்டும். தசமபாகம் கேட்பது சரியா? தவறா? தசமபாகம் கேட்பது சரியா? தவறா? என்ற முக்கியமான தங்களுடைய கேள்விக்கு வருவோம், இந்த சரியா தவறா என்ற வாதமே தவறு ஆகும், தசமபாகம் என்பது கேட்காமலேயே தேவன் மீது கொண்ட நன்றி உணர்வினால் நாம் கொடுக்க வேண்டும், ஒருவேளை உணர்வில்லாத இருதயத்துக்கு தசமபாகம் கொடுக்கச் சொல்லித் தூண்டும் செயல் என்பதாகவே கேட்பதைப் பார்க்கவேண்டும், பணத் தேவைகளுக்காக ஊழியர்கள் தசமபாகம் கேட்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக வேண்டுமே என்ற பயத்தினால் தசமபாகத்தை கேட்காமல் இருப்பது, மனித தூஷனங்களுக்கு பயந்து கர்த்தருக்கு பரிசுத்தமானதை தராமல் வஞ்சிக்கும்படியான சாத்தானின் தந்திரத்திற்கு துணைபோவதற்கு ஒப்பானதாகும், ஆகவே தூஷனங்கள் வந்தாலும் தசமபாகம் பற்றிய கருத்தை கிறிஸ்தவர்களிடம் சரியாக சென்றடையச் செய்தலும், தசமபாகத்தைத் கொடுக்கும்படி தூண்டுவதும் ஊழியர்களின் கடமையாகும். ஒருவேளை ஒரு குறிப்பிட்ட ஊழியருக்கு அளவுக்கு அதிகமாக காணிக்கை வருகிறது என்று ஒரு விசுவாசி நினைத்தால், வசதியற்ற மற்றொரு ஊழியருக்கு தசமபாகம் கொடுக்கலாம், அல்லது திக்கற்றவர்கள், அனாதைகள் விதவைகளுக்குக் கொடுக்கலாம், ஆனால் எக்காரணம் கொண்டும் அதை தன் சுய தேவைகளுக்காகப் பயன்படுத்தி கர்த்தருக்கு பரிசுத்தமானதை வஞ்சிக்கக் கூடாது, உலகப்பிரகாரமான சுகங்களைத் துறந்து தேவனுக்காக தன்னை முற்றிலும் விற்றுப்போட்ட தேவ ஊழியர்களுக்கும்,ஏழைகளுக்கும், விதவைகளுக்கும் தேவன் தம்முடைய பரிசுத்த பங்கை சுந்தரமாகக் கொடுத்திருக்கிறார்(உபா26:12) என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். ஆகவே தசமபாகத்தை வஞ்சிப்பது இப்படிப்பட்டவர்களை வஞ்சிப்பதற்கு ஒப்பானதாகும். புதிய உடன்படிக்கையில் தசமபாகம் சரியானதா? நாம் இப்போது புதிய உடன்படிக்கைக் காலத்தில் வாழ்ந்து வருகிறோம், ஆகவே தற்போது தசமபாகம் கொடுப்பது ஏற்புடையதா என்று ஆராய்வதற்கு முன்பு நம்முடைய இரட்சகர் இயேசு கிறிஸ்து தசமபாகத்தை விட்டுவிடக்கூடாது என்பதை போதித்திருக்கிறார்(மத்23:23) என்பதை நாம் நினைவில் நிறுத்திக்கொண்டு மேற்கொண்டு வாசிக்கலாம், முதல் உடன்படிக்கை என்பது இஸ்ரவேல் மக்களிடத்தில் செய்யப்பட்டது, ஆனால் புதிய உடன்படிக்கை இயேசு கிறிஸ்துவின் சொந்த இரத்தக் கிரயத்தால் வாங்கப்பட்ட நம் அனைவருடனும், அதாவது இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட நம் அனைவரிடமும் செய்யப்பட்டது, ஆகவே தசமபாகம் என்ற நியாயப்பிரமானத்தை நாம் கடைபிடிக்கலாமா? என்ற கேள்வி சரியானது அல்ல, தசமபாகம் ஒரு ஆரம்பமே.. நியாயப்பிரமானம் இல்லாத காலத்திலேயே தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஆபிரகாம் தசமபாகம் செலுத்தினார்(ஆதி 14:20). யாக்கோபு தன்னுடையவைகள் எல்லாவற்றிலும் தசமபாகம் செலுத்துவதாக வேண்டிக்கொண்டான்(ஆதி 28:22). அகவே தசமபாகத்தை நியாயப்பிரமான வட்டத்துக்குள் வைத்து அதை ஒதுக்கக்கூடாது, அதோடு மட்டுமல்ல இயேசு கிறிஸ்து தசமபாகத்தைக் கொடுப்பதை விட்டுவிடக்கூடாது என்று சொல்லியிருப்பதை நினைவில் கொள்ளவேண்டும். நாமே தேவனுக்கு சொந்தம் பத்தில் ஒரு பங்கை எதற்காக கொடுக்கவேண்டும் என்று சாத்தானின் தந்திரமான ஆலோசனைகளை விட்டுவிட்டு, தேவன் மீது நாம் கொண்டிருக்கும் நன்றியுணர்வை வெளிப்படுத்த நாம் தசமபாகம் கொடுக்கத்தான் வேண்டும். ஆனாலும் கட்டாயத்தின் பேரிலோ, கடமைக்காகவோ, பெயருக்காகவோ கொடுக்காமல் தாராளமாய் (2 கொரி 8:2),உற்சாகமாய் (2 கொரி 9:7),தியாகமனப்பான்மையுடன் (2 கொரி 8:3) கொடுக்க வேண்டும், அப்படியில்லாமல் நம் மனம் அந்த முதன்மையான பாகத்தை வஞ்சிக்க நினைக்குமானால், நம்முடைய இரட்சிப்பும், தேவன் மீது நமக்கிருக்கும் அன்பிலும் கோளாறு இருப்பதாக எளிதாக அறிந்துகொள்ள முடியும், யாரெல்லாம் தசமபாகம் கொடுக்கக் கூடாது? தன் சகோதரனுக்கு ஒப்பான சக மனிதர்கள் எத்தகைய குற்றம் செய்திருப்பினும், அதை மன்னிக்க மனமின்றி இருக்கும் போலி கிறிஸ்தவர்கள் தசமபாகம் மட்டுமல்ல, மற்ற எந்த காணிக்கையைக் கொடுத்தாலும் தேவன் அதை அங்கீகரிக்க மாட்டார், அப்படிப்பட்டவர்களை தேவன் தன்னுடைய பிள்ளைகளாக ஏற்றுக் கொள்வதில்லை. வெளி உலகுக்கு வேண்டுமானால் அவர்கள் கிறிஸ்தவர்களாக அறியப்படுவார்களேயன்றி, கிறிஸ்துவுக்கும் இவர்களுக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லை, ஆகவே மன்னியாதவர்கள் மாத்திரம் தசமபாகம் செலுத்தாமல் அந்த முதல்பங்கை தன் இஷ்டத்துக்கு செலவு செய்ய உரிமை பெற்றவர்களாக இருப்பர். தசம பாகத்தின் நிறைவு முன்பே பார்த்தது போல தசமபாகம் என்பது ஒரு ஆரம்பமே,ஆனால் ஒரு கிறிஸ்தவன் தன்னுடைய அடிப்படைத் தகுதிக்குப் போக மீதம் இருப்பவைகள் யாவற்றையும் கொடுக்கலாம், அதாவது தசமபாகம் போக மீதமிருக்கும் பகுதியில் தன்னை பாதிக்காத அளவுக்கு தேவனுக்குக் கொடுக்கலாம், (தேவனுக்கு என்றால் ஊழியர்களுக்கு, திக்கற்றவர்களுக்கு ஆகும்). அதையும் மீறி தன்னிடம் இருக்கும் அனைத்தையும் தேவனுக்கென்று கொடுப்பது சிறிதானதாகிலும் தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது ஆகும். முடிவாக.. தசமபாகம் கொடுக்கக்கூடாது என்ற தூஷனாமான சாத்தானின் உபதேசங்களுக்கு மயங்கிவிடாதபடிக்கு நன்றியுணர்வுள்ளவர்களாக உற்சாகமாக நம்மால் முடிந்த மட்டும் தேவனுக்கென்று கொடுப்போம், தேவன் மீது வைத்திருக்கும் அன்பை பணம் என்ற விக்கிரகத்துக்கு முன் விற்றுப்போட்டு உலகத்தின் போக்கில் சென்றுவிடாதபடிக்கும் எச்சரிக்கையாக இருப்போம்.

bibleuncle


என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். - (மல்கியா 3:10).
    .
ஹென்றி பி. கிரோவெல் (Henry P. Crowell ) என்பவர், ஒரு பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும், அவரது சிறு வயதில் காசநோயினால் பாதிக்கப்பட்டார். அதினால் அவர் பள்ளியை விட வேண்டி இருந்தது. அவர் ஒரு நாள், டி.எல் மூடி பிரசங்கியாரின் செய்தியை கேட்க நேர்ந்தது. அப்போது அவர் தீர்மானித்தார், ‘என்னால் பிரசங்கிக்க முடியாது. ஆனால் சிறந்த தொழிலதிபராக முடியும், ஆண்டவரே, உமக்கு சித்தமாயிருந்தால், நான் ஆரம்பிக்கும் தொழிலில் நல்ல லாபம் அடைய உதவி செய்யும், நான் அதிலிருந்து உமக்கு உண்மையாக உம்முடைய ஊழியத்தை தாங்குவேன்' என்று பொருத்தனை செய்தார்.
    .
வைத்தியர்களின் ஆலோசனைப்படி, அவர் இருந்த இடத்தை விட்டு வெளியே ஏழு வருடங்கள் இருந்த பின்பு முற்றிலும் சுகமானார். பின் ஓஹியோ (Ohio) என்னுமிடத்தில்Quaker Mills என்னும் சிறிய ஓட்ஸ் தயாரிக்கும் ஆலையை ஆரம்பித்தார். பத்து வருடங்களுக்குள் அமெரிக்காவின் ஒவ்வொரு வீட்டிலும் ஓட்ஸ் (Oats) காலை உணவாக மாறியது. அவரும் தன் தசமபாகத்தை பத்தில் ஒரு பங்காக ஆரம்பித்து, படிப்படியாக உயர்ந்து 70 சதவீதம் தேவனுடைய ஊழியத்திற்கு கொடுக்க ஆரம்பித்தார். இன்றும் Quaker Oats உலகமெங்கும் பரவி, அநேகர் பயன்படுத்துகிறார்கள். ஒரு மனிதனின் உண்மையினால், அவனுடைய செய்கைகளையும் தொழிலையும் கர்த்தர் ஆசீர்வதித்தார்.
    .
ஒரு வாலிபன் தொழிலை ஆரம்பித்து தோல்வியை கண்டான். அப்போது அவனுடைய நண்பன் அவனிடம், ‘நீ கர்த்தரை முதலாவது வைக்காவிட்டால், உன் தொழிலால் பயனில்லைஎன்று கூறினான். அப்போது அந்த வாலிபன், ‘என்னுடைய (Cheese) சீஸ் செய்யும் தொழிலில் நான் தேவனை என் பங்காளராக சேர்த்து கொள்கிறேன். அவர் சொல்கிறபடி நான் அவருடன், அவருக்காக உழைப்பேன் என்று தீர்மானித்தவனாக, தன் லாபம் எல்லாவற்றையும் கர்த்தருக்கென்று கொடுத்தபோது, அவனுடைய சீஸ் வியாபாரம் செழித்தோங்கியது. அது யார் என்று கேட்கிறீர்களா? Kraft Cheese Company - யின் முதலாளி J.L. Kraft தான் அவர்.
    .
இப்படி, கர்த்தருக்கு கொடுத்து, ஆசீர்வதிக்கப்படடவர்களின் எண்ணிக்கை சொல்லி முடியாது. தசமபாகம் கொடுப்பதால் நமக்கு ஆசீர்வாதமே ஒழிய குறைவு ஒரு நாளும் வராது. எத்தனையோ உதாரணங்களை சொல்லி கொண்டே போலாம். நீங்கள் தசம பாகம் கொடுக்கிறீர்களா? என் சம்பளமே மிக குறைவு, நான் அதில் எப்படி கர்த்தருக்கு கொடுப்பது என்று யோசிக்கிறீர்களா? கொடுத்து பாருங்கள். உங்கள் களஞ்சியஙகள் நிரம்பி வழியும்படி இடமில்லாமற் போகுமட்டும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். கடன் மேல் கடன், நான் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை, எப்படி அடைப்பது என்று திணறி கொண்டு இருக்கிறீர்களா? உங்கள் சம்பளத்தில் கர்த்தருக்கென்று முதலில் தசமபாகத்தை எடுத்து கொடுங்கள், உங்கள் கடன் சீக்கிரமாய் முடிந்து போவதை காண்பீர்கள். சம்பளம் வந்தவுடனே அவனவன் வந்து பிடுங்கி கொண்டு போகிறான் என்று சொல்கிறீர்களா, தசமபாகத்தை எடுத்து வைத்து விட்டு மற்றதை கொடுங்கள். கர்த்தர் சொல்கிறார், இதனால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று. செய்துதான் பாருங்களேன், ஹென்றி கிரோவெல் போல 70 சதவிகிதம் கொடுக்கும் கிறிஸ்தவராய் நீங்கள் மாறிவிடுவீர்கள். தங்கள் இயலாமையிலிருந்து கர்த்தருக்கென்று கொடுத்து, மில்லினர்களாக மாறின எத்தனையோ பேருண்டு. கோல்கேட் பேஸ்ட் நிறுவனர் திரு கோல்கேட் அவர்கள், J.C. Penny நிறுவனர் திருJ.C. Penny அவர்கள்...
    .
சரி, கொடுப்பது என்று இப்போது நீங்கள் தீர்மானித்திருப்பீர்களானால் யாருக்கு கொடுப்பது என்ற கேள்வியும் வரும். என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள்என்று தேவன் சொல்கிறார். நீங்கள் செல்லும் ஆலயத்திற்கு கொண்டு கொடுக்க வேண்டும். தேவன் தம் சுய இரத்தத்தால் சம்பாதித்த சபை, அதிலே அவருடைய ஆசீர்வாதம் விளங்குகிறபடியால் அங்கு உங்களுடைய தசமபாகம் செல்ல வேண்டும். உங்களுடைய ஆத்மீக ஆகாரத்தை நீங்கள் அங்கு பெற்று கொள்கிறபடியால் அங்கு உங்களுடைய தசம பாகம் கொடுக்கப்பட வேண்டும்.
    .
பின், பிற இடங்களில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் உண்மையாய் ஊழியம் செய்கிற ஒவ்வொரு ஊழியங்களையும் உங்கள் மன விருப்பத்தின்படி தாங்கலாம்.
    .
தேசத்திலே நிலத்தின் வித்திலும் விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது (லேவியராகமம் 27:30). ஆகையால் கர்த்தருக்குரியதை கர்த்தருக்கே கொடுப்போம். முதலாவது நம்மை அவருக்கு கொடுப்போம், பின் நம்முடையதை அவருக்கு கொடுப்போம் கர்த்தர் நம்மை இடம் கொள்ளாமல் போகுமட்டும் ஆசீர்வதிப்பார். கர்த்தருடைய வார்த்தை அப்படி சொல்கிறது, அப்படியே செய்யும். ஆமென் அல்லேலூயா!
    .
    என்ன கொடுப்பேன் என் இயேசுவுக்கு
    என் வாழ்வில் செய்த நன்மை ஏராளமே
    ஏராளம் ஏராளம் ஏராளமே
    கர்த்தர் செய்த நன்மைகள் ஏராளமே

    ஜெபம்

எங்களை இடம் கொள்ளாமற் போகுமட்டும் ஆசீர்வதிப்பேன் என்று ஆசீர்வதிக்கிற நல்ல கர்த்தரே, உம்மை துதிக்கிறோம். முதலாவது எங்களையும் பின் எங்களது தசமபாகங்களையும் உமக்கு கொடுக்க எங்கள் ஆததுமாக்களை ஏவியருளும். அதன் மூலம் ஆசீர்வாதங்களை பெற்று உமக்கென்று சாட்சியாக ஜீவிக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

 nanri christian 

No comments:

Post a Comment